நம்ம கதை இப்டீன நம்ம பிரண்டு வந்து ஏர்போர்ட்ல இறங்கி இருக்காரு. இறங்கி வரும் போதே மூச்சா வந்திருச்சி. சரின்னு ஒரு டாய்லெட் பாத்து போயி closet ல நின்னு ஜிப்ப கழட்டிட்டு நிமிரும் போது தான் பாத்திருக்காரு ஒரு சிகப்பு லைட்டு தலைக்கு மேல எரியறத. இவர் ரொம்ப குழம்பி போய்ட்டார். இந்த ஊருல மூச்சா போறதுக்கு கூடல்ல இவனுங்க சிக்னல் வைச்சிருக்காங்கன்னு அடக்கி கிட்டு கொஞ்ச நேரம் லைட்டு பச்சையா மாற காத்திருந்திருக்காரு. ஒண்ணும் மாத்தமில்ல. சரி ஒரு வேளை அந்த சிக்னல் ரிப்பேரோன்னு இதுக்கு மேல பொறுக்க முடியாம திறந்த ஜிப்போட அடுத்த closet க்கு தாண்டி இருக்காரு. கொடும என்னன்னா அங்கனையும் ரெட் லைட்டு. இவரு நகந்தது தான் தாமசம். இவரு முதலில் நின்ன closet உஸ்ன்னு ஒரு சத்தம். வெழவெழத்துப் போயிட்டாரு. இந்த ஊரு ரொம்ப ஸ்ட்ரிக்டாமே. நாம ஏதாச்சும் தப்பு பண்ணி போலீசு கீலிசு பிடிச்சு உள்ளாற போட்டுட்டா என்ன பண்ணன்னு யோசிச்சாலும் ரொம்ப அவசரம். அந்த நேரம் பாத்து ஆபத்பாந்தனா வேற ஒருத்தர் வந்து சும்மா சர்ருன்னு ரெட் சிக்னல்லயே மூச்சா போனத பார்த்தார். சரி தான் உலகமெல்லாம் கிமீ, கிலோன்னு இருக்கைல இங்க மட்டும் மைலு, பவுண்டுன்னு இருக்குறது போல இந்த ஊருல ரெட்டுல தான் போகணும் போலன்னு இவரும் போனாராம்.
நல்ல வேளை இவரு இந்த விசயத்த எங்க கிட்ட சொல்ற வரைக்கும் டிரைவிங் கிளாசோ இல்லை டிரைவிங் டெஸ்டோ எடுக்க போகலை. இல்லேன்னா இவர் மாத்திரம் ரெட் சிக்னல்ல போகலாம்னு சொல்லி கார எடுத்திருந்தா என்ன ஆயிருக்கும்?
(அந்த சிவப்பு லைட், ஆட்டோமேடிக் பிளஷ்க்காக சென்சார் லைட்)
Saturday, December 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
i know this first time. this world has changed so much:-P
Post a Comment