Saturday, December 6, 2008

நண்பரின் கூகிள் Interview அனுபவம்



"Onsite opportunity" க்கு "Onsite "ஆப்பு"ர்டுனிட்டி..இ ஒரு meaning இருக்குனு புரியத்துக்கு முன்னாடி ஆறு மாசம் எப்படி போனது என்றே தெரியலே. அவ்வளவு pressure,வைகை புயல் stylea சொல்லனும்னா "எவ்ளவு முடியுமோ..அவ்வளவு வொர்க் வாங்கிட்டு" கடைசில client feedback/Review சூப்பர் நு. இந்தியா ல இருந்து ப்ராஜெக்ட் மேனேஜர் மெயில் அனுப்புறார்.ச்ச்ஷு...

US Election, ஒபாமா,US economic slowdown நு என்னை சுத்தி எவ்வளவோ நடந்து முடிஞ்சிர்ருக்கு ..ஆபீஸ் விட்ட apartmentnu(தூங்குறதுகு மட்டும் , மத்தது எல்லாம் ஆபிச்லே தான் ).. அமெரிக்கா லைப்ல அமெரிக்காவை நிறைய மிஸ் பண்ணிடோம்னு இப்ப புரியுது .இந்தியாவுல இருக்கும் போது.. காலை ல ஆபீஸ் போநதும் , டெய்லி ஒரு blog எழுதிட்டு , காபிடேரியா காலி பண்ணுநோமா, டைம் இருந்த கொஞ்சம் வாங்குற சம்பளதிருக்கு கொஞ்சம் வொர்க் பண்ணுநோமா , வீக் எண்டு சத்யம், திநகர், ECR,pondicheery இன்னு , போன்னா லைப் ... இப்ப.... பக்கத்துல universityla படிக்கிற எங்கயூர் பையனே பார்க்க போகறது கூட நேரம் இல்ல .." Damn Work".. "Hectic workload"..இதுல blog எப்படி எழுதுறது..கடந்த வாரம், நம்ம ஆந்திர wala கூகிள் ல ஒரு interview attend பண்ணிட்டு வந்தார்.. அவருக்கு கேட்ட questions பண்ணி discuss பண்ணுனோம்.."Thalaiver பாணில சொல்லனும்னா, ஒவ்வவொரு Questionaa அவர் சொல்ல சொல்ல எனக்கு "Just now கண்ணே கட்டிடுச்சு"..

Many are open ended with several right answers, therefore I did not provide the answers.
1. How many golf balls can fit in a school bus?
2. You are shrunk to the height of a nickel and your mass is proportionally reduced so as to maintain your original density. You are then thrown into an empty glass blender. The blades will start moving in 60 seconds. What do you do?
3. How much should you charge to wash all the windows in Seattle?
4. How would you find out if a machine’s stack grows up or down in memory?
5. Explain a database in three sentences to your eight-year-old nephew.
6. How many times a day does a clock’s hands overlap?
7. You have to get from point A to point B. You don’t know if you can get there. What would you do?
8. Imagine you have a closet full of shirts. It’s very hard to find a shirt. So what can you do to organize your shirts for easy retrieval?
9. Every man in a village of 100 married couples has cheated on his wife. Every wife in the village instantly knows when a man other than her husband has cheated, but does not know when her own husband has. The village has a law that does not allow for adultery. Any wife who can prove that her husband is unfaithful must kill him that very day. The women of the village would never disobey this law. One day, the queen of the village visits and announces that at least one husband has been unfaithful. What happens?
10. In a country in which people only want boys, every family continues to have children until they have a boy. if they have a girl, they have another child. if they have a boy, they stop. what is the proportion of boys to girls in the country?
11. If the probability of observing a car in 30 minutes on a highway is 0.95, what is the probability of observing a car in 10 minutes (assuming constant default probability)?
12. If you look at a clock and the time is 3:15, what is the angle between the hour and the minute hands? (The answer to this is not zero!)
13. Four people need to cross a rickety rope bridge to get back to their camp at night. Unfortunately, they only have one flashlight and it only has enough light left for seventeen minutes. The bridge is too dangerous to cross without a flashlight, and it�s only strong enough to support two people at any given time. Each of the campers walks at a different speed. One can cross the bridge in 1 minute, another in 2 minutes, the third in 5 minutes, and the slow poke takes 10 minutes to cross. How do the campers make it across in 17 minutes?
14. You are at a party with a friend and 10 people are present including you and the friend. your friend makes you a wager that for every person you find that has the same birthday as you, you get $1; for every person he finds that does not have the same birthday as you, he gets $2. would you accept the wager?
15. How many piano tuners are there in the entire world?
16. You have eight balls all of the same size. 7 of them weigh the same, and one of them weighs slightly more. How can you find the ball that is heavier by using a balance and only two weighings?
17. You have five pirates, ranked from 5 to 1 in descending order. The top pirate has the right to propose how 100 gold coins should be divided among them. But the others get to vote on his plan, and if fewer than half agree with him, he gets killed. How should he allocate the gold in order to maximize his share but live to enjoy it? (Hint: One pirate ends up with 98 percent of the gold.)
Do you still think you have what it takes to work for Google?
...............ரூம் போட்டு Yosipanglow...........

அமெரிக்கா அனுபவம் -1

முத முதல்ல அமெரிக்கா வந்து இறங்குனது அட்லாண்டா, ஜார்ஜியா. ஏர்போர்ட்ல இருக்குனதும் கண்ண கட்டது. அவ்ளோ பெரிசு. திக்கு திசை தெரியல. இறங்கின இடத்துலேர்ந்து மத்திய மேற்கில் நான் வேலை பார்க்கப் போகும் கம்பனி இருக்கும் ஊருக்கு போக திரும்ப வேற ஒரு பிளைட் பிடிக்கணுமாம். அப்போதைக்கு எனக்கு புரிஞ்சது விருது நகர்லேர்ந்து மதுர பெரியார் பஸ்ஸ்டாண்டுல இறங்கி அண்ணா நகர், தபால் தந்தி நகர் போக டவுன் பஸ் பிடிக்கிற மாதிரி தான் இதுவும்னு.
ஒண்ணும் பேசாம அங்கன இருந்த ஒரு வெள்ளைக்கார பாப்பா கிட்ட டிக்கட்ட காட்டினேன். அது வடகிழக்கா கைய காட்டி டிரெய்ன், நெக்ஸ்ட் கான்கேர்ஸ்ஸுன்னு ஏதோ சொன்னிச்சு. ஆனாலும் இந்த பயபுள்ளைக ரொம்ப மோசம். இந்த கான்கோர்ஸ் அங்கிறாய்ங்க, அந்த கான்கோர்ஸ் அங்கிறாய்ங்க. நமக்கு தெரிஞ்சதெல்லாம் நான் மெட்ராசுல படிச்ச ஸ்போக்கன் இங்கிலீசு கோர்சுதான். இப்பத்தான் பிளைட்லேர்ந்து இறங்கி இருக்கோம். அடுத்து பிளைட் ஏறணும்னு நினைச்சா, போயி டிரைய்னல ஏறுங்கிறாய்ங்க. ஒரு வேளை இவனையல்லாம் இது வரை பிளைட்ல கொண்டு வந்ததே போதும்னு நெனச்சிட்டாங்களோ என்னமோ? சரி சரி. நாம மட்டுமா போறோம். எவ்ளோ சனங்க போகுது. சேர்ந்து போவாம்னு மனச தேத்திகிட்டேன்.
அடுத்து, சரி ப்ளைட்டுன்னா 2 இல்ல மூணு மணி நேரத்துல அந்த ஊருக்கு போயிடும்ன்னாங்களே இப்ப டிரைய்ன்னா எவ்ளோ நேரம் ஆகுமோ? டிரைய்ன பெர்த் இருக்குமா? ரிசர்வ்டா? அன் ரிசர்வ்டா? ரெண்டு கைலயும் ரெண்டு பொட்டி, தோள்ல ஒரு லக்கேஜு. ஒரு வழியா டிரய்ன்ல ஏறினா உட்கார கூட எடமில்ல. சரி தான் இங்கயும் நம்மூரு போலத் தான். நின்னுகிட்டு தான் போகணுமாக்கும். சரி கொஞ்சம் காத்தாட நின்னுகிட்டாவது வரலாம்னு சொல்லி பொட்டிகள எல்லாம் ஒரு ஓரமா வச்சிட்டு டிரெய்ன் படியாண்ட போயி நின்னேன். எல்லாம் என்னையே ஒரு மாதிரி பாத்தாய்ங்க. அடுத்து டிங் டிங்ன்னு சத்தம். ஸ்பீக்கர்ல ஏதோ ஸ்டாண்ட் கிளியர் ஸ்டாண்ட் கிளியர்ன்னு சத்தம். நான் இருந்த பொட்டில எல்லாம் ஏதோ சொல்றாங்க. என்னை பாத்து தான் சொல்றா மாதிரி இருக்கு. ஆனா எனக்கொண்ணும் புடிபடல. அப்ப ஒரு கருப்பர் என் கிட்ட வந்து "மூவ். மூவ்"ன்னாரு.
சரி தான் நம்மள நகரச் சொல்லிட்டு இவரு படிக்கட்டுல நிக்கப் போறாரு போல இருக்கு. பார்க்க ஆளு ஓங்கு தாங்கா இருக்காரு. எதுக்கு அவருகிட்ட போயி வம்புன்னு கதவாண்ட இருந்து தள்ளி வந்து நின்னேன். அடுத்த நிமிசம் டிங் டிங் சத்தமும் இல்லை. அந்த ஸ்டாண்ட் கிளியர் ஸ்பீக்கர் சத்தமும் இல்லை. கதவு வந்து சட்டுன்னு மூடிக்கிருச்சு. அப்பத்தாம் எனக்கு புரிஞ்சது. நாந்தான் அந்த கதவ மூட விடாம நின்னு கிட்டு இருந்திருக்கேன். அதாம் எல்லா சனமும் ஏதோ சர்க்கஸ்ல கோமாளிய பாத்தமாதிரி பாத்திருக்குன்னு.

அமெரிக்கா அனுபவம் -2

டிரெய்ன் அடுத்த ஐந்தாவது நிமிடமே நின்றது. சரி சரி இன்னும் ஆள் ஏத்தப் போறாங்க போலன்னு நின்னுகிட்டே இருந்தேன். என்னை தவிர எல்லோரும் இறங்கிட்டாங்க. கடைசியா இறங்கின அந்த கருப்பர் லாஸ்ட் ஸ்டாப். கோயிங் பேக்குன்னு ஏதோ சொன்னாரு. எனக்கு திரும்ப ஒரே குழப்பம். இருக்காதா பின்னே? பிளைட்டுலயே இரண்டு மூணு மணி நேரம் ஆகும்னு சொன்னாங்க. இப்ப என்னடான்னா டிரய்ன்ல அஞ்சே நிமிசத்துல லாஸ்ட் ஸ்டாப்புன்னா எப்படி? சரின்னு விதி மேல பாரத்த போட்டுட்டு பெட்டிகள எடுத்துகிட்டு கீழே இறங்கினேன். அந்த கருப்பர் கிட்ட ஒண்ணும் பேசாம என் டிக்கட் காட்டினேன். அவரு பாத்துட்டு ஏதோ கேட் நம்பர் சொன்னாரு. சரீன்னு திரும்ப என் டிக்கட்ட பார்த்தா அதுல அவர் சொன்ன கேட் நம்பர் போட்டிருந்துச்சி. போர்டுல இருந்தத படிச்சு கிட்டே அந்த கேட்ட பாத்து நடைய கட்டினேன். வழில டெர்மினல் லே அவுட்டுன்னு ஒரு போர்டு பார்த்தேன். அப்பத்தான் எனக்கு ஏதோ கொஞ்சம் விளங்குச்சு.
நான் வந்து இறங்குனது ஏர்போர்ட்டுல ஒரு கான்கோர்ஸ்ல. நான் திரும்ப ஏற வேண்டிய பிளைட் இன்னோரு கான்கோர்ஸ்ல. ஆக ஒரு கான்கோர்ஸ்லேர்ந்து இன்னோரு கான்கோர்ஸுக்கு தான் இப்ப நான் டிரைய்ன வந்து இறங்கி இருக்கேன்னு. மெட்ராஸ் ஏர்போர்ட் மாதிரி இல்லாம இங்க ஏர்போட்டே ஒரு ஊரு மாதிரி. தாம்பரத்திலேர்ந்து வெஸ்ட் மாம்பலம் வர்ற எலெக்ட்ரிக் டிரெய்ன் மாதிரி ஒரு டிரெய்னல தான் நான் ஏறி வந்திருக்கேன்னு. நல்ல வேளையா இந்த டிரெய்னுக்கு தனியா ஏதும் டிக்கட் வாங்கச் சொல்லலியேன்னு ஒரு சந்தோசம்.

இந்த ஏர்போர்ட் ஒரு தனி உலகம். உள்ளேயே எல்லா கடைகளும், பாரும். என்ன சுத்தம்? அதே நேரம் மதுர சித்திர திருவிழா கூட்டம் மாதிரி கூட்டமான கூட்டம். கொஞ்ச சனம் இங்கிட்டு ஓடுது. கொஞ்ச சனம் அங்கிட்டு ஓடுது. கொஞ்ச சனம் நிம்மதியா பாருல உட்காந்து தண்ணிய போட, இன்னும் கொஞ்சம் ஏதேதோ தின்னுகிட்டு இருக்கு. சில கேட்டுகள்ல மட்டும் கூட்டம் அம்முது. ஆனாலும் எல்லாம் வரிசைல நிக்குதுக. 4 அல்லது 5 கேட்டுக்கு அடுத்து டாய்லெட். எல்லா டாய்லெட்டும் சுத்தமா பளபளக்குது. நான் போக வேண்டிய பிளைட்டுக்கு இன்னும் 2 மணி நேரம் காத்திருக்கணும். அந்த கேட்டுகிட்ட வந்தப்பறம் தான் கொஞ்சம் மூச்சி வந்தது.

டாய்லெட் போய் வந்தாச்சி. பிளைட்ல அடிச்ச சரக்குக்கு நாவெல்லாம் வரண்டு போயி, தொண்டை காந்துது. தாகம்னா தாகம் அப்படி ஒரு தாகம். சரி தண்ணி குடிக்கலாம்னு பாத்தா திரும்ப குழப்பம். அங்க இங்க அலைஞ்சி தண்ணி இருக்கிற எடம் பார்த்தாச்சு. ஆனா டம்பர் ஒண்ணும் காணோம். நம்மூர்ருல இருக்க மாதிரி டம்ளர சங்கிலி கட்டி தொங்க விட்டிருப்பாங்கன்னு பாத்தா ம்ஹீம். இல்லை. அட என்னடா இது? நம்மூரு பக்கம் காக்கா பானைல கல்லு போட்டு தண்ணி குடிச்ச மாதிரி குடிக்கலாம்னு பார்த்தாலும் பானையும் இல்லை. கல்லும் இல்ல. என்ன பண்ணுறது ஏது பண்ணுறதுன்னு புரியல.

சரி நம்மள இவ்ளோ தூரம் கொண்டு வந்த முப்பாத்தம்மா (அதாங்க எங்க குல தெய்வம்) நம்மள கை விட மாட்டான்னு சொல்லி மனச தேத்தி கிட்டு எதுத்தாப்பல இருந்த ஒரு சேருல உட்கார்ந்துட்டேன். அட இவ்ளோ சனத்துல யாருக்காச்சும் தாகம் எடுக்காமலா போயிரும். அப்ப இங்க வந்து தானே ஆகணும். அவங்க எப்படி தண்ணி குடிக்கிறாங்கன்னு பார்த்துட்டு நாமளும் அப்படியே குடிச்சிடலாம்னு காத்திருந்தேன். அஞ்சி நிமிசம், பத்து நிமிசம், பதினஞ்சு நிமிசம் ஆச்சு. யாரும் வர்றா மாதிரி தெரியல. அப்பத் தான் கொஞ்ச தூரத்துல ஒரு கோக் மிசின் பார்த்தேன். அங்க போய் பார்த்தா ஒரு கோக்கு 75 சென்ட்டுன்னு போட்டிருந்துச்சு. உடனே மனசு கணக்கு போட்டுச்சி. இன்னைக்கு தேதிக்கு டாலருக்கு 45 ரூபாய். 75 சென்ட்டுன்னா கிட்டத்தட்ட 35 ரூபாய். 35 ரூபாய்க்கு கோக் குடிக்கணுமான்னு தோணவும் திரும்ப வந்து நல்ல பிள்ளையா உட்காந்துகிட்டேன்.

அடுத்த பத்தாவது நிமிசம் கோட்டு சூட்டெல்லாம் போட்டு ஒரு வெள்ளைக்காரர் வந்தார். அவரு நேரா தண்ணி குடிக்கிற இடத்துகிட்ட போனார். அந்த மேடைய சுத்தி பிளாஸ்டிக்கல ஏதோ பட்டை மாதிரி இருந்துச்சி. அத அமுக்கினாரி. உடனே தண்ணி பீச்சி மேல் வாக்குல அடிக்க அப்படியே குனிஞ்சி தண்ணில வாய் வச்சி குடிச்சாரு. ஆகா இப்படித் தான் இந்தூருல தண்ணி குடிக்கணுமான்னு தெரிஞ்சிகிட்டு அவரு போனதும் போயி உர் உர்ருன்னு உறிஞ்சி தாகம் தீர குடிச்சேன்.
நான் மட்டும் தான் இப்படின்னு நெனச்சா அமெரிக்கா வந்து 6 மாசத்துக்கப்பறம் மப்புல ஒருத்தர் ஏர்போர்ட் டாய்லெட்டுல சிக்னல்ல மூச்சா போன கதை சொன்னதுக்கப்பறம் தான் தெரிஞ்சது, நம்மள மிஞ்சவும் ஆளுக இருக்காங்கன்னு.


அந்த கதை அடுத்து. .......

என் அமெரிக்கா அனுபவம் -3

நம்ம கதை இப்டீன நம்ம பிரண்டு வந்து ஏர்போர்ட்ல இறங்கி இருக்காரு. இறங்கி வரும் போதே மூச்சா வந்திருச்சி. சரின்னு ஒரு டாய்லெட் பாத்து போயி closet ல நின்னு ஜிப்ப கழட்டிட்டு நிமிரும் போது தான் பாத்திருக்காரு ஒரு சிகப்பு லைட்டு தலைக்கு மேல எரியறத. இவர் ரொம்ப குழம்பி போய்ட்டார். இந்த ஊருல மூச்சா போறதுக்கு கூடல்ல இவனுங்க சிக்னல் வைச்சிருக்காங்கன்னு அடக்கி கிட்டு கொஞ்ச நேரம் லைட்டு பச்சையா மாற காத்திருந்திருக்காரு. ஒண்ணும் மாத்தமில்ல. சரி ஒரு வேளை அந்த சிக்னல் ரிப்பேரோன்னு இதுக்கு மேல பொறுக்க முடியாம திறந்த ஜிப்போட அடுத்த closet க்கு தாண்டி இருக்காரு. கொடும என்னன்னா அங்கனையும் ரெட் லைட்டு. இவரு நகந்தது தான் தாமசம். இவரு முதலில் நின்ன closet உஸ்ன்னு ஒரு சத்தம். வெழவெழத்துப் போயிட்டாரு. இந்த ஊரு ரொம்ப ஸ்ட்ரிக்டாமே. நாம ஏதாச்சும் தப்பு பண்ணி போலீசு கீலிசு பிடிச்சு உள்ளாற போட்டுட்டா என்ன பண்ணன்னு யோசிச்சாலும் ரொம்ப அவசரம். அந்த நேரம் பாத்து ஆபத்பாந்தனா வேற ஒருத்தர் வந்து சும்மா சர்ருன்னு ரெட் சிக்னல்லயே மூச்சா போனத பார்த்தார். சரி தான் உலகமெல்லாம் கிமீ, கிலோன்னு இருக்கைல இங்க மட்டும் மைலு, பவுண்டுன்னு இருக்குறது போல இந்த ஊருல ரெட்டுல தான் போகணும் போலன்னு இவரும் போனாராம்.
நல்ல வேளை இவரு இந்த விசயத்த எங்க கிட்ட சொல்ற வரைக்கும் டிரைவிங் கிளாசோ இல்லை டிரைவிங் டெஸ்டோ எடுக்க போகலை. இல்லேன்னா இவர் மாத்திரம் ரெட் சிக்னல்ல போகலாம்னு சொல்லி கார எடுத்திருந்தா என்ன ஆயிருக்கும்?

(அந்த சிவப்பு லைட், ஆட்டோமேடிக் பிளஷ்க்காக சென்சார் லைட்)

அமெரிக்கா அனுபவம் -4


அமெரிக்கா வந்த புதிது. நான் அப்போது சுத்த சைவம் . வந்து சேர்ந்த ஊரில் நானும் எனக்கு ஒரு வாரம் முன்னாடி எனது அலுவலகம் மூலமாகவே இங்கு வேலை கிடைத்து வந்திருந்த ஒரு ஆந்திரா நண்பரும் ஒரு Apartment ல ஷேர் பண்ணி தங்கி இருந்தோம். நமக்கு ஆங்கில புலமையும் கம்மி.
காலேசுல கம்ப்யூட்டர் சயின்ஸ் இஞினியரிங் படிச்சாலும் ஆங்கில கம்யூனிகேசன் ரொம்ப தடுமாறும். இருக்காதா பின்னே? காலேஜ்ல லெக்சரரே "அந்த நம்பர் இந்த variable வழியா போயி, அந்த Array இருக்க ஒரு இடத்துல சேரும் ம்னு ..." பாடம் நடத்துவார்.

அடுத்து வேலை சென்னைல டிரைனியா. , Knowledge Transfer, kick off, Scrum நு எல்லா மீடிங்க்ள கூட்டதோட கோவிந்தா போட்றதோடு சரி. என்ன problem வந்தாலும் ப்ராஜெக்ட் மேனேஜர், Team Leader yodu சரி. நமக்கு பேச வாய்ப்பே கிடைக்காது. கிடைச்சாலும் போன்ல அந்த பய புள்ளக என்ன பேசுதுன்னு ஒண்ணும் விளங்காது. இந்த லட்சணத்துல அமெரிக்கா வரதுக்காக இன்டர்வியூ பண்ணினவர் நம்மூரு காரரு ஒருத்தருங்கறதால எப்படியோ சமாளிச்சாச்சு. டெக்னிகலா பேசுறதெல்லாம் புரியும். மத்ததெல்லாம் சும்மா இடமும் வலமுமா தலை அசைச்சோ இல்ல, மையமா ஒரு அசட்டு புன்னகைலயோ சமாளிக்கிறது தான்.


அது நாள் வரை அம்மா சமையல், காலேஜ் ஹாஸ்டல் மெஸ், அல்லது ரோட்டோர புரோட்டாக்கடை, சென்னையில் பணி புரிந்த போது திரும்ப மெஸ் என சாப்பாடு ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை. அதனால் சமையல் பற்றி எல்லாம் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஒரு வழியாக முதல் நாள் ஏதோ பிரட், ஜாம் சாப்பிட்டு ஓட்டி விட்டேன். அன்று இரவே அம்மாக்கு போன் போட்டு குக்கரில் சாதம் எப்படி வைப்பது என தெரிந்து கொண்டு வெற்றிகரமாக சாதம் வைத்தாகி விட்டது. என்னத்தை ஊற்றிச் சாப்பிட? வெறும் சோறை எப்படி தின்பது? அப்பத்தான் நம்ம ஆந்திரா நண்பர் ஒரு ஐடியா சொன்னார். பக்கத்துல இருக்க கடைக்கு போய் தயிர் மட்டும் வாங்கி வருவோம். எங்கிட்ட கொஞ்சம் சாதப் பொடி, ஊறுகாய் இருக்குன்னார். கடை கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் வீட்டுல இருந்து. அப்பத்தான் அமெரிக்கா வந்திருந்ததால காரெல்லாம் கிடையாது. நட ராஜா சர்வீசு தான்.
சரின்னு கடைக்கு போய் தேடு தேடுன்னு தேடினோம் தயிர. ம்ஹீம். அகப்படல. தயிர இங்கிலீசுல கர்டு(Curd)ன்னு தான சொல்லுவோம்னு அங்க வேலை பார்க்கிற ஒரு பொண்னு கிட்ட போயி கேட்டும் பார்த்தோம். அது முழிச்ச முழிய பாத்தா கர்டுன்னா இந்தூருல ஏதோ கெட்ட வார்த்தையாட்டம் இருக்குன்னு நெனச்சுகிட்டு என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு திகைச்சு போய் நின்னோம். ஒண்ணும் விளங்கல. சரி நமக்கு இந்த ஊருல தெரிஞ்ச ஒரே ஆபத்பந்தவனு "கூகிள்" மட்டும் தான் வேற யாருமமிலநு . திரும்பி வீட்டுக்கு. வந்து ஒரு வழிய சர்ச் பண்ணுன . இந்தூருல தயிர கர்டுன்னு சொல்ல மாட்டாங்க. கடைல போயி யோகர்ட்டுன்னு தேடுன்னாங்க. -கூகிள் அய்யா வழிகாட்டுனர்.


சரி திரும்ப நடைய கட்டு கடைக்கு. இப்பவே மணி 8 ஆச்சு. ஊதக் காத்தடிக்குது. குளிரு வெடவெடங்குது. பசி வேற. ஒரு வழியா அடிச்சி பிடிச்சு கடைல போயி யோகர்ட்டுனு தேடி ஒரு டப்பாவ தூக்கி கிட்டு கையோட ஒரு பாக்கட் சிப்ஸ் வாங்கிகிட்டு வந்தாச்சி. இப்ப மணி 9 ஆச்சு. இருட்டு. குளிரு, பசி. வீட்டுக்கு வரதுக்குள்ள உடெம்பெல்லாம் வெறச்சி போச்சி. அதீத பசில கண்ணு கட்டுது. அத்தோட இந்த கர்ட், யோகர்ட், தயிரு குழப்ப டென்சன மறக்க வெறும் வயித்துல அடிச்ச ரெண்டு மூணு தம்மு வேற.
ஆவலா வந்து இருக்குற சோத்த அப்படியே ரெண்டா வகுந்து ஆளுக்கொரு தட்டுல சோத்த போட்டு நல்லா தயிர ஊத்தி பெசஞ்சாச்சு. தயிர அப்படியே பாக்க கெட்டியா நம்மூரு எருமைத் தயிரு மாதிரி இருக்க, கொஞ்சம் ஜாஸ்தியாவே விட்டு நல்லா பெசஞ்சி பக்கத்துல ஊறுகாய் வச்சிகிட்டு எடுத்து வாயில வச்சா....


வாந்தியே வந்துரும் போல ஆயிருச்சு. ஒரே இனிப்பு. ஒண்னும் விளங்கல எங்களுக்கு. என்னத்த பண்ண? சோறும் மிச்சமில்லை. எல்லா சோத்தையும் போட்டு பெசஞ்சாச்சு. எனக்கான அழுகை கண்ண முட்டுது. விதியேன்னு எல்லாம் எடுத்து குப்பைல போட்டுட்டு வெறும் சிப்சும் தண்ணியும் குடிச்சிட்டு படுத்துட்டோம். மறு நாள் ஆபீசுல போய் அந்த காலேஜு பய புள்ளகள ஏண்டா இந்த ஊரு தயிரு இப்படி இனிக்குதுன்னா அவனுங்க இடி இடின்னு சிரிக்கிறானுங்க. நீங்க பிளைன் யோகர்ட் பாத்து வாங்கணும்டா. ஏதாச்சும் பிளேவர் யோகர்ட் வாங்கி இருப்பீங்கன்னு. அப்பறம் கடைல போயி பாத்தா தான் தெரியும் இந்தூரு பக்கிக ஸ்ட்ராபரி, ராஸ்பெரின்னு என்னென்ன பழம் இருக்கோ எல்லாத்தையும் தயிர்ல கலந்து வச்சிருக்குகன்னும் நாங்க அன்னிக்கு ராத்திரி வாங்கி வந்தது வெனிலா யோகர்ட்டுன்னும்.

Friday, December 5, 2008

இந்தியா பொருளாதாரமும் - ஒரு குட்டி கதையும்.



ஒரு தீவு. அந்த தீவில் புழக்கத்தில் இருந்தது இரண்டு ‘ஒரு ரூபாய்’ நாணயங்கள் மட்டுமே.அந்த தீவில் குடியிருப்போர் மூன்று பேர். முகேஷ் மற்றும் அனில் ஆளுக்கொரு ரூபாய் வைத்திருந்தனர். மூர்த்தியிடம் பணம் இருக்கவில்லை. ஆனால் அவன் ஒரு தென்னங்கன்று வளர்த்தான்.முகேஷ் அதை ஒரு பணம் காய்ச்சி மரம் என்பதை எப்படியோ புரிந்து கொண்டு மூர்த்திக்கு ஒரு ரூபாய் கொடுத்து மரத்தை வாங்கினான்.

இப்போது தீவின் மதிப்பு மூன்று ரூபாய்கள். அதாவது மூர்த்தி அனில் இருவரிடமும் ஒவ்வொரு ரூபாயும் முகேஷிடம் ஒரு ரூபாய் மதிப்புள்ள மரமும் இருக்கிறது.இதைக் கண்ட அனில் பணம் காய்ச்சி மரம் பிற்காலத்தில் பயன்படும் என்று மூர்த்தியிடம் ஒரு ரூபாய் கடன் வாங்கி தனது ஒரு ரூபாயையும் சேர்த்து முகேஷிடமிருந்து இரண்டு ரூபாய் கொடுத்து மரத்தை வாங்கினான். இப்போது தீவின் மதிப்பு நான்கு ரூபாய்கள்.

அதாவது மரம் 2 ரூபாய், முகேஷிடம் 2 ரூபாய்.மரத்தின் விலை ஏறுவதைக் கண்ட மூர்த்தி அதை விற்றதற்காக மனம் வருந்தி முகேஷிடம் 2 ரூபாய் கடன் வாங்கி அனிலிடம அவன் (அனில்)ஏற்கனவே பட்டிருந்த ஒரு ரூபாய் கடனையும் தள்ளுபடி செய்து மீண்டும் மரத்தை வாங்கினான். இப்போது மரத்தின் மதிப்பு 3 ரூபாய்கள். அனிலிடம் 2 ரூபாய்கள். தீவின் மதிப்பு 5 ரூபாய்கள்.அடடே மரத்தின் விலை கூடிக்கொண்டே போகிறதே என்று முகேஷ் அனிலிடம் 2 ரூபாய் கடன் வாங்கி மூர்த்தியின் 2 ரூபாய் கடனை தள்ளுபடி செய்து 4 ரூபாய்களுக்கு மரத்தை கிரயம் செய்தான். இப்போது மூர்த்தியிடம் 2 ரூபாய்கள். தீவின் மதிப்பு 4 +2 =6 ரூபாய்கள்.

திடீரென்று அனிலுக்கு கவலைப் பிடித்துக்கொண்டது. மரம் நினைத்தபடி பலன் தராமல் போய்விட்டால் முகேஷ் எப்படி தன்னுடைய 2 ரூபாய் கடனை திருப்பித்தர முடியும். மூர்த்திக்கும் அதே கவலை பிடித்துக் கொண்டது. அதனால் கையில் பணமிருந்தும் அவன் மரத்தை விலை பேச முன்வரவில்லை. என்னதான் சொன்னாலும் காய்க்காத தென்னங்கன்றின் மதிப்பு ஒரு ரூபாய்தான் என்பதை புரிந்து கொண்டான் அவன்.இப்போது மரத்தை வாங்குவோர் இல்லை. மூர்த்தியிடம் 2 ரூபாய்கள் இருக்கிறது. முகேஷிடம் 4 ரூபாய் மதிப்புள்ள மரம் ஒரு ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. எனவே அவன்அனிலுக்கு கொடுக்க வேண்டிய 2 ரூபாய் கடனில் ஒரு ரூபாய் மட்டுமே திருப்பித்தர இயலும்.முகேஷ் திவாலாகிப் போனான். முகேஷ் பட்ட கடனை அனில் திரும்பாதக் கடனாகத் தள்ளுபடி செய்தான். இப்பொது தீவின் மதிப்பு மீண்டும் 3 ரூபாய்கள். 6 ரூபாயில் இழந்த 3 ரூபாய்கள் எங்கே போயிற்று ?


கதை சொல்லும் நெறி:

எளிமை கருதி வர்த்தகம் மூவருக்குள்ளே நடப்பதாக காட்டப்பட்டது. அங்கே இன்னுமொரு மரம் இருந்து ரத்தன் என்பவன் சொந்தக்காரனாக இருந்திருந்தால் இன்னும் ருசிகரமான கைமாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். ரத்தன் விளையாட்டில் சேராமல் வேடிக்கைப் பார்த்தாலும் அவனுடைய மரத்தின் விலையும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்திருக்கும். அதற்குதகுந்தாற்போல் தீவின் மதிப்பு ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும்.

இதைத் தவிர வெளித் தீவிலிருந்து யாரேனும் முதலீடு செய்ய முற்பட்டிருந்தால் பணபுழக்கம் அதிகரித்து தீவின் மதிப்பும் காகிதத்தில் உயர்ந்து கொண்டே போகும். புத்திசாலியான வெளியாள் செயற்கையாக விலையை ஏற்றி, மரத்தை சமயம் பார்த்து உள்ளுர்காரனுக்கே அதிக விலையில் விற்று தன்னுடைய வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றிக் கொண்டு போயே போய் விடுவான். அப்போது தீவில் உள்ளவர்கள் ஏமாளிகளாக அமர்ந்திருக்க வேண்டியது தான்.
பங்குச் சந்தை செய்கின்ற குளறுபடிகளும் இப்படிபட்டதே. எவனொருவன் வேகமாய் பணமாக மாற்றிக் கொள்வானோ அவனே புத்திசாலி. பங்கு காகிதத்தை நம்பி பணம் கொடுத்த வங்கிகளுக்கும், கடன் வாங்கி முதலீடு செய்வோருக்கும் கடைசியில் தலையிலே துண்டு.

Tuesday, September 9, 2008

அமெரிக்கா - வழிகாட்டி பகுதி-2


அமெரிக்கா போறீங்களா? - உபயோகமான வெப் தளங்கள்

எனக்கு தெரிந்த சில உபயோகமான வெப் தளங்கள்...உங்கள் பார்வைக்கு.
அமெரிக்க சட்டம் மற்றும் immigration சம்பந்தமாக Law sites


http://www.murthy.com/
http://www.rapidimmigration.com/usa/1_eng_goal.html

Good sites for searching Deals,Coupons and Prices


http://www.deals2buy.com/
http://www.pricewatch.com/
http://www.flamingoworld.com/
http://www.brokenprices.com/
http://www.tigerdirect.com/

Good site for searching rooms and apartments
http://classifieds.sulekha.com/changelocation.aspx?url=/rental-roommates/1.htm

Good site for searching apartments
http://www.apartmentguide.com/index.asp?partner=6171&media=Overture&keyword=Find_an_Apartment&tg=Tier1&misc=National&ovmkt=A5ACPQU4B1K5276I9D4IUOFIGC
http://www.apartmetguide.com/g-common2B.php?ppid=11716&K=find%20an%20apartment&PHPSESSID=0a0000c954c10abe918075ec2450e49930acaaa0&PROV=-FW2

Cheapest Health Insurance
http://health.kvrao.org/

Cheapest Auto Insurance
http://www.progressive.com/

Good banking for new comers-(Specially who plans for unsecured credit cards and loans)
http://www.dcu.org/

Good hotel travel vacation
http://www.bookingbuddy.com/
http://www.priceline.com/

Good money to india for those who have NRE account back home in India http://www.onlinesbi.com/gls/
https://cash2india.xoom.com/

Convenient way to call India with your cell without any pin numbers http://www.relianceindiacall.com/

Good site for Share Stocke Options
http://www.schwab.com/
http://www.ameritrade.com/
http://www.callpix.com/
http://www.coveredcalls.com/

Good Tax site
http://www.olt.com/

அமெரிக்கா ஸ்பான்ஸர் கம்பெனிகள் பிளாக் லிஸ்ட் உள்பட

சில H1B மற்றும் Greencard ஸ்பான்சஸர் செய்யும் அமெரிக்கா based கம்பெனிகள் லிஸ்ட் இங்கே உங்களுக்காக

List of US based companies for JobOpportunity


List of Companies you need to be careful.(People had bad experience or Black listed)

1.Mastech Sys
2.Syntel
3.Computer People Inc.
4.Capricon
5.American MegaTrend Inc.
6.CBS
7.Intelligroup (Edison - New Jersey)
8.Cybertech (Chicago - Ilinnois)
9.Systech (Gelndale - Calif.)
10.IntecNew Jersey. Now it is named as Compuflex.
11.Indotronixs or Indotronics
12.Capricorn Systems Inc , Atlanta
13.BCC computers Ltd in Madras
14.Frontier Systems
15.C G VAK(Coimbatore)
16.Kumaran Software, Anna Nagar, Madras
17.BCS Project Consultants; Bangalore or BCS Computer Consultancies and Services.
18.Pragathi Computers; Bangalore.
19. Indusa Technical Corp, chicago
20.SYSINNOVATE INC,CA
21. Realsoft technologiees LLC
22.Friendly Consultants-Princeton,NJ

அமெரிக்கா சில அளவீட்டு முறைகள்

உலகமே மாறியிருக்கும் போது தான் மட்டும் அடம்பிடித்து வைத்திருக்கும் சில அளவீட்டு முறைகள் கீழே.-வேறு வழியில்லை அதற்கு இப்போதைக்கு.

எடைகள்: Weight is measured in ounces and pounds.
1 ounce = 28 grams,
1 pound = 0.45 kg.

தொலைவு: The basic units of distance are inch, foot, yard and mile.
1 yard = 0.9 meter,
1 mile = 1.6 km.

வெப்பம்: temperature is measured in Fahrenheit degrees.
1 celcius is 1.8 Fahrenheit.
C=(5/9)*(T-32)
F=(9/5)*C+32
C=temperature in degrees Celsius
F=temperature in degrees Fahrenheit

கொள்ளளவு:Volume
1 Ounce (OZ) Fluid = 29.57 ml
1 Gallon = 3.785 Liters


அமெரிக்க நாணயம் பற்றிய விளக்கம் இங்கே.

அமெரிக்க நாணயம் cents and dollars- $.
நாணயங்கள் 1,5,10,25 cents- களாக உள்ளன.
நோட்டுகள் 1, $5, $10, $20, $50 மற்றும் $100 - களாக உள்ளன.
100 cents=1 dollar ஆகும்
1 cents-ஐ 1 penny என்கிறார்கள்
5 cents-ஐ 1 nickel என்கிறார்கள்
10 cents-ஐ 1 dime என்கிறார்கள்
25 cents-ஐ 1 quarter என்கிறார்கள்
dollars-ஐ bucks என்கிறார்கள்

பொதுவாக எல்லா அமெரிக்க நாணயங்களிலும் நோட்டுகளிலும் "In God We Trust" என்ற வாக்கியத்தை காணலாம்.
சமீபத்தில் (மார்ச்) புதிதாக வெளியிடப்பட்டுள்ள 10 டாலர் நோட்டில் "We The People" என்ற (First three words of the Constitution) வாசகம் உள்ளது.

அமெரிக்கா உணவு முறைகள்

அங்கு காலையில் முட்டையும் முட்டை சார்ந்த உணவும் மதியம் சிக்கனும் சிக்கன் சார்ந்த உணவும் பிரபலம்.சன்னி சைட் அப்,ஸ்கிராம்பில்ட் எக்,வித விதமான ஆம்லேட், சான்விச் என நிறைய வகைகளில் முட்டை சாப்பிடுகிறார்கள்.காலையில் பெரும்பாலோனோரை டன்கின் டோனட்ஸ் காபி கப்போடு தான் பார்க்க முடியும். டோஸ்ட்,மப்பின், க்ரோஸன்ட், டோனட், பீகிள், சாலட், சூப்,
லசானியா, பீஸா, சப், நூடுல்ஸ், ராப்ஸ், பான் கேக்ஸ், சைனீஸ் பப்பே, காட் டாக்ஸ், நக்கட்ஸ், ஸ்ரைப்ஸ், ப்ரைஸ், பர்கர் உணவு வகைகள் பிரபலம்.
எல்லா உணவிலும் சீஸ் தவறாமல்.கோக், பெப்ஸி வகையராக்களை சோடா என்கிறார்கள்.
மெக்டொனால்ட்ஸ், பர்கர்கிங், பீஸாகட், பப்பாயீஸ், ரெட்லாப்ஸ்டெர்,
டிஜிஐப்ரைடேஸ், சார்லி ப்ரொவ்ன், ரூபி ட்யூஸ்டே, ஹார்டீஸ், ஒயிட்கேஸ்டில், சப்வே, கேஎப்சி, டாகோபெல், பட்ரக்கர்ஸ், பிளிம்பீஸ், டெலி,ஆலிவ் கார்டன், பாஸ்டன்மார்க்கட், டைனெர், டோமினொஸ், விண்டீஸ், ஹூட்டர்ஸ், பென்னிகென்ஸ், ஆப்பிள்பீஸ், குயிஸ்னோஸ் இவை பிரபல உணவகங்கள்.
நன்றாக சீஸ் சாப்பிடுவதாலோ என்னமோ பெரும்பாலோர் ஓவர் வெயிட்.
ரோட்டோரமாய் அல்லது எதாவது பார்க்குகளில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் இல்லை வோர்க் அவுட் ப்ளேஸ் போய் உடற்பயிற்சி செய்து சில பவுண்ட் எடை குறைக்க எல்லோருமே முயன்று கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்க நெடுஞ்சாலைகள்


அங்கே நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் எண்களால் குறிப்பிடப்படுகின்றன.வடக்கு தெற்காய் ஓடும் சாலைகள் ஒற்றைபடை எண்ணிலும் (எ.கா Route 1-(Pronounced as ரவுட்)) கிழக்கும் மேற்காய் ஓடும் சாலைகள் இரட்டைபடை எண்ணிலும் குறிப்பிடுகிறார்கள். (எ.கா.ரவ்ட் 256)
மாகாணங்களை இணைக்கும் பெருஞ்சாலைகள் டர்ன்பைக் (TurnPike)எனப்படுகின்றன.
மற்ற நெடுஞ்சாலைகள் பார்க்வேஸ் (Parkways) எனப்படுகின்றன.பெரும்பாலும் குறுக்காக செல்லும் சாலைகள் அவெனியூ (Avenue) என்றும் நெடுக்காக செல்லும் சாலைகள் ஸ்டிரீட்-Street அல்லது ரோடு-Road என்றும் அழைக்கப்படுகின்றது.
இரு மருங்கும் மரங்கள் நிறைந்த சாலை போலேவாட்-Boulevard எனப்படுகிறது.
பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகள்,ரயில்கள் நம்பமுடியா அளவு அட்டவணை நேரப்படி வந்து போகும்.

Academy,greyhound,CoachUSA,NJTransit,MTA,NYC Transit இவை சில East Coast பொது பேருந்துகள்.Amtrack,NJTransit,Subway,PATH,MTA இவை சில East Coast ரயில்கள்.ஒற்றைபடை எண் கட்டடங்கள் சாலையின் ஒரு மருங்கிலும்,இரட்டைபடை எண் கட்டடங்கள் சாலையின் மறு மருங்கிலும் வரிசைபடுத்தப்பட்டுள்ளன.சாலைகளின் சிக்னல்கள் லைட்ஸ் எனப்படுகின்றன.
"Support Our Troops,Proud to be an American" இவை சாலை வாகனங்களின் பிரபல வாசகங்கள்.சில வாகனங்கள் Stop War.Put troops on the Mexican border என புஷ்ஷை திட்டவும் செய்கின்றன.

சைரென் லைட் உள்ள ,இல்லாத கார்களில் மாமாக்கள் வலம் வருவார்கள்.சில சமயம் பதுங்கியும் இருப்பர்.ஓவர் ஸ்பீட் தாதாக்களை பிடிக்கத் தான்.மரத்தாலும் இரும்பாலும் ஆன நாடு இதுவென்றால் மிகையில்லை.வீடுகள் மரத்தாலானதென்றால்,மாபெரும் பாலங்களும்,வானுயர் கட்டடங்களும் இரும்பை உருக்கி கொட்டி கட்டியிருக்கிறார்கள்.
மாதம் ஏறக்குறைய $400 தவணையும்,$300 இன்சூரன்சும்,$100 காஸ்க்கும் (அதாங்க Gasoline எனப்படும் பெட்ரோல்) நீங்கள் செலவு பண்ணமுடியுமென்றால் நீங்களும் கார்வைத்துக்கொள்ளலாம்.எல்லாரும் அதைத்தான் செய்கிறார்கள்.காரில்லா வாழ்வு மிகக் கடினம்.யாரோ சொன்னார்கள்.அமெரிக்க வாழ்க்கைக்கு நான்கு C-க்கள் மிக முக்கியம் என்று.CAR--CREDIT CARD-COMPUTER-CELLPHONE.

கூடவே Job-ஐயும் சேர்த்துக்கோங்கப்பு.

அமெரிக்க செல்போன் வாங்க மின்சார உபயோக விவரங்கள்

இந்திய லாப்டாப்,இந்திய குக்கர் போன்றவற்றை அமெரிக்காவில் உபயோகிக்க (110/220v 50/60Hz copatibility is required)அல்லது அமெரிக்க லாப்டாப்,அமெரிக்க குக்கர் போன்றவற்றை இந்தியாவில் உபயோகிக்க (again 110/220v 50/60Hz copatibility is required)பயனுள்ள அடாப்டெர் செட்
http://www.amazon.com/gp/product/B0009EXVFI/sr=8-7/qid=1145017232/ref=sr_1_7/102-9280189-1212950?%5Fencoding=UTF8
http://www.magellans.com/store/Electrical___Plug_AdaptorsEA240K?Args=

அமெரிக்காவில் பொதுவாக செல்போன் ப்ளானோடுதான் வாங்கமுடிகிறது.ப்ளான் இன்றிசெல்போன் வாங்க
http://www.cellhut.com/

இந்தியாவில் ஆன்லைனில் செல்போன் வாங்க-பரிசளிக்க
http://shopping.sify.com/shopping/category.php?pid=19723&vsv=SMLN014

காரிலிருந்த படி உங்கள் லாப்டாப்பை மின்னேற்றம் செய்ய
http://www.meritline.com/car-power-adapter-laptop-notebook-computer.html

அமெரிக்கா-உங்கள் மாகாணத்தில் சேல்ஸ் டாக்ஸ் எவ்வளவு % அறிய
http://thestc.com/STRates.stm

அமெரிக்க முக்கிய வெப்தளங்கள் மற்றும் அமெரிக்க உச்சரிப்பு முறைகள்

American universities list
http://www.globalcomputing.com/universy.html

The Complete List: 1,200 Top U.S. Schools
http://www.msnbc.msn.com/id/12532678/site/newsweek/

USA all 50 states information
http://www.infoplease.com/states.html

USA Zipcode Distance Checker
http://www.orangehedgehog.com/zipcodes/?c=US

North American (NANPA) Telephone Code List
http://www.orangehedgehog.com/telephone_codes/nanpa_code_list.php?type=c

Spelling differences between American and British English
http://www2.gsu.edu/~wwwesl/egw/jones/differences.htm

Different Words in American and British English
http://www2.gsu.edu/~wwwesl/egw/jones/words.htm

All time 100 novels
http://www.time.com/time/2005/100books/the_complete_list.html

All time 100 movies
http://www.time.com/time/2005/100movies/the_complete_list.html

English grammer
http://www2.gsu.edu/~wwwesl/egw/grlists.htm


How To Speak like American :

1 U don't open conversation (on telephone) with a "Hello", ......but with a "Hi" !
2.U never say "want to" /"going to" do it?? u say "wanna"/ "gonna" do it.
3. The telephone is never "engaged", ???.it's always "busy".
4. U don't "disconnect" a phone, ??.U simply "hang-up".
5. U never "mess-up" things, ????U only "screw them up".
6. U never have a "residence" tel. no., ???.U have a "home" no.
7. U never have a "office" tel. no., ???U have a "work" no.
8. U don't stop at the "signals", ???..but halt at the "lights".
9. U don't "accelerate", ??.U "step on the gas".
10 Your tyre never "punctures", ???.U may have a "flat".
11 The trains have "coaches" or "bogies' ;no more ! ..but "carriages" or "boxes".
12. There are no "petrol pumps", ???.but "gas stations"..
13 U no longer meet a "wonderful" person, ???U meet a "cool" guy
14 U don't pull the switch down to light a bulb. U rather flick it up.
15 U don't "turn on the heat", ???? U "turn on the juice".
16 There's no "Business Area" ... only "business districts", ???.and no "districts" but"counties".
17 No one stays "a stone's throw away", rather "a few blocks away".
18 There's no "Town Side", ???..it's "Down Town".
19 In hotel U no longer ask for "bill" and pay by "cheque", ??.rather ask for "check" and pay with "bills" (dollars).
20 There are no "soft drinks", ???.. only "sodas"/"pop".
21 Life's no longer "miserable", ??? it "stinks".
22 U don't have a "great" time, ???? U have a "ball".
23. U don't "sweat it out", ????U "work U'r butt off".
24. Never "post" a letter, ??always "mail" it and "glue" the stamps,?..don't "stick" them.
25. U no longer live in "flats" , ???..U live in "apartment".
26. U don't stand in a "queue", ???..you are in a "line".
27. U no longer "like" something, ??? U "appreciate" it.
28. "#" is not "hash", ???..it's "pound".
29. U R not "deaf", ???.U have "impaired hearing".
30. U R not "lunatic", ????U are just "mentally challenged".
31. U R not "disgusting", ???.. U R "sick".
32. U can't get "surprised", ???? U get "zapped".
33. U don't "schedule" a meeting, ????.. U "skejule" it.
34. U never "joke", ????U just "kid".
35. U never "increase" the pressure, ???U always "crank" it up.
36. U never ask for a pencil "rubber" U ask for an eraser.
37. U don't try to find a lift, ???..U find an elevator.
38. U no more ask for a route??? but for a "RAUT"
39. U don't ask somebody "How r u ?", ???.U say "What's up dude?" or U say "How U DOIN' "
40. U never go to "see" a game, ???? U go to "watch" a game.
41. If U see "World" champions(or Series), ????read "USA" champions (orSeries).
42. There's no "zero" but "O", ???.no "Z" but "zee".
43. There's no FULL STOP after a statement, ???. there's a PERIOD.
44. If someone gets angry at U, ???.U get "flamed".
45. U Drive Ur car on Parkways and ???..always park your car in the driveway!
46. You do not ask for" brinjal" .?.. ask for "eggplant "?? also there are no"lady's finger".its "Okra" !
47. In short U don't speak English, ????.U speak American.

------------------------------------------------------------------
... here's 1 more....
... U don't make a move..... U always get going...
------------------------------------------------------------------

நன்றி

www.pkp.in